அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்

காரைக்குடியில் இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை:
பி.ஏ., - வரலாறு, ஆங்கிலம், பொது நிர்வாகம்
பி.எஸ்.சி., - உளவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.லிட். - தமிழ்,
பி.பி.ஏ., - பேங்கிங்
பி.எல்.ஐ.எஸ்., 1 ஆண்டு
பி.சி.ஏ.,, பி.காம். போன்ற படிப்புகள் இளநிலை படிப்பில் வழங்கப்படுகிறது.
முதுநிலை:
எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, சைல்டு கேர் மற்றும் எஜூகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம், பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ்
எம்.பி.ஏ., - எஜுகேஷன் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், கார்ப்ரேட் செகரட்டெரிஷிப், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், வங்கி மற்றும் நிதி, டூரிசம், இன்டர்நேஷனல் பிசினஸ்
எம்.எஸ்.சி., - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.சி.ஏ., எம்.காம்.,எம்.எல்.ஐ.எஸ்.,
முதுநிலை டிப்ளமோ:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பி.ஜி.டி.சி.ஏ.,), ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் மேனேஜ்மென்ட்,
பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்டிரியல் ரிலேஷன்ஸ், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
மேலும் சுய உதவிக்குழு மேலாண்மை குறித்த 6 மாத சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
இது குறித்த தகவல்களுக்கு:
அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பாநகர், காரைக்குடி தொலைபேசி : 04565 425200
இ.மெயில் : alagappa@md3.vsnl.net.in
வெப்சைட் :
கிராமத்தவர் வேலைவாய்ப்புக்காக திறந்தநிலை பல்கலை. சான்றிதழ்
லண்டன் பல்கலைக்கழகத்தின் முன்னணிக் கல்லூரியான லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பல டிப்ளமோ படிப்புகளை வடிவமைத்து நடத்தி வருகிறது.
இவற்றில் கணக்கியல் (அக்கவுண்டிங்), வங்கியியல் (பேங்கிங்), நிதியியல் (ஃபைனான்ஸ்), தகவல் முறைமை (இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்), நிர்வாகவியல் ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் இந்தியாவிலேயே நடத்தப்படுகின்றன.
முதுநிலை டிப்ளமோ படிப்புகளை சென்னையில் உள்ள "சிட்டி ஸ்கூல் ஆப் சோஷியல் அண்ட் மேனேஜிரியல் சயன்சஸ்' கற்றுத் தருகிறது. ஓராண்டு நடத்தப்படும் இப்படிப்பில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் சேரலாம்.
லண்டன் பல்கலைக்கழகம் 1836ல் தொடங்கப்பட்டு பிரிட்டிஷ் அரசின் ஆதரவுடன் செயல்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் உள்பட 19 கல்லூரிகள் இதனுடன் இணைந்துள்ளன. 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் சேருகின்றனர்.
பல்கலைக்கழக அடிப்படைப் படிப்பு:
வெளிநாடுகளில் படிப்பதற்காக விண்ணப்பித்து, இடம் கிடைக்காதவர்கள், தங்களது தகுதி, திறனை வளர்த்துக் கொள்ள பிரிட்டனின் அடிப்படைக் கல்வி (மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ் ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய் இர்ன்ழ்ள்ங்) மூலம் திறனை வளர்த்துக்கொண்டு வாய்ப்பைத் தேடலாம். இதை "சிட்டி ஸ்கூல் ஆப் சோஷியல் அன்ட் மேனேஜ்மென்ட்' நடத்துகிறது.
"பிளஸ் 2' முடித்தவர்கள் இதில் சேரலாம். தினந்தோறும் இரண்டரை மணி நேரம் வீதம் வாரத்தில் 5 நாள்கள். ஆங்கிலம், தகவல் பரிமாற்றத் திறன், கவனித்தல், படித்தல், எழுதுதல், பேசுதல் ஆகியவை படிப்பில் அடங்கும்.
இவை தவிர, ஆளுமைப் பயிற்சியும் அளிக்கப்படும்.
தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயித்தல் (Goal Setting), எதிர்காலம் குறித்து திட்டமிடல் (Career Planning), பொது மேடையில் பேசுதல் (Public Speaking),திறனை வெளிப்படுத்துதல் (Presentation Skill) ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை தவிர, அடிப்படை அல்ஜீப்ரா, அடிப்படை புள்ளிவிவர இயல்(Elementary Statistics), பொருளியல் அறிமுகம் (Introduction to Economics),வணிகவியல், அடிப்படை கணினி (Basic Computiting)ஆகியவற்றையும் கற்கலாம். கட்டணம் ரூ.15 ஆயிரம். இதை இரு தவணைகளில் செலுத்தலாம்.
தொடர்புக்கு...
City School of Social Managerial Sciences, II Floor, Vijaya Complex, Asiad Colony, Anna Nagar (W), Chennai-101.
Pho. 004-2615 3030, 2651 0303 fax: 2615 0456.
e-mail: info@city-schools.com
www.city-schools.com
தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு Es[Õ. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பி.ஏ. பி.எஸ்சி., பட்டதாரிகள் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரம், வணிகவியல், கம்ப்ïட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ் போன்ற பாடங்களாக இருந்தால் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்திலும் மற்றும் மாவட்ட, தாலுகா அளவில் அமைந்துள்ள அதன் கல்வி மையங்களிலும் கிடைக்கும்.
கட்டணம் ரூ.500. கல்வி மையங்கள் பற்றிய விவரங்களை 04362-227152 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்