பல்கலைக் கழகங்கள்

அழகப்பா பல்கலைக்கழகம்



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா நகரில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கடந்த 1956ம் தொடங்கப்பட்டது.

மேலைநாட்டு வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு வணிக நிர்வாகவியலில் முதுகலைப் பட்டப் படிப்பை வழங்கி வருகிறது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம்.


இப்பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:


மகளிரியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (எம்.டபிள்யூசிஏ.,) வணிகவியல் (எம்.காம்.,), இயற்பியல், கணிதம் பாடங்களில் (எம்.எஸ்சி.,), தமிழ் (எம்.ஏ.,), கணினியியல் (எம்.சிஏ.,) வணிக நிர்வாகவியல் (எம்.பி.ஏ.,), பன்னாட்டு வணிக நிர்வாகவியல் (எம்.ஐ.பி.ஏ.,), வங்கியியல் (எம்.பி.எம்.,), நிர்மசெயலறிவியல் (எம்.சி.எஸ்.,), வேதியியல் ஆய்வக வேதியியல், டெக்ஸ்டைல் மற்றும் எலக்ட்ரோ வேதியியல்.


மேலும் (எம்.எஸ்சி.,), கடலியல் மற்றும் கடலோரவியல் (எம்.எஸ்சி.,), உடற் கல்வியியல் (எம்.பி.எட்.,), உயிரித்தொழில் நுட்பவியல் (எம்.எஸ்சி.,). பிஎட், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ் (மாலை நேரப் படிப்பு), எம்பில் தமிழ், கல்வியியல், நிர்ம செயலறிவியல், மகளிரியல், தொழிற்சாலை வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல், வங்கி மேலாண்மை, வணிகவியல் மற்றும் உடற்கல்வியியல், கடலியல் மற்றும் கடலோரவியல்.
முதுநிலைப் படிப்புகள் (வீக்-என்ட் புரோகிராம்): 
எம்எஸ்சி வேதியியல், எம்.சி.ஏ. டிப்ளமா -ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி.

இதுதவிர, பல்வேறு துறைகளில் பிஎச்டி ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.


தொடர்புக்கு:

பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் - 630 003.

தொலைபேசி: 04565 -228080 முதல் 228095 வரை

இணையதள முகவரி: http://www.alagappauniversity.ac.in/


அண்ணாமலை பல்கலைக்கழகம்



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:


எம்.ஏ. தத்துவம், அப்ளைடு சைக்காலஜி, வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், அப்ளைடு எகனாமிக்ஸ், ஆங்கிலம், அமெரிக்கன் ஸ்டடீஸ், தமிழ், சம்ஸ்கிருதம், மொழியியல், டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ், சோஷியாலஜி, டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், பாப்புலேஷன் ஸ்டடீஸ், ஹிந்தி டிரான்ஸ்லேஷன், காந்தியன் ஸ்டடீஸ்.

எம்.காம், கோ ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ், மாஸ்டர் ஆஃப் பைனான்சியல் சர்வீசஸ்.


இளநிலைப் படிப்பு:


இசை; முதுநிலை படிப்பு: லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயன்ஸ், இசை.


முதுநிலை டிப்ளமா:

சுற்றுலா, மனித உரிமைகள் மற்றும் அமைதி, ஆர்கைவ்ஸ் கீப்பிங், எகனாமெட்ரிக்ஸ், காந்தியச் சிந்தனை, ராமலிங்கர் தத்துவம், கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பேங்கிங் லா அண்ட் பிராக்டிஸ், இன்சூரன்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், அப்ளைடு லிங்கியுஸ்டிக்ஸ், பாப்புலேஷன் எஜுகேஷன்.

சான்றிதழ் படிப்பு:

அட்வான்ஸ்ட் டிப்ளமா -பிரெஞ்ச், மொழியியல், இதழியல், நாட்டுப்புறவியல், ரெப்ரோகிராபி அண்ட் நான்புக் மெட்டீரியல்ஸ், ஆங்கிலம் (கம்யூனிகேஷன்), இசை (வாய்ப்பாட்டு).
டிப்ளமா: பிரெஞ்ச், மொழியியல், மொழிகள், இதழியல், நாட்டுப்புறவியல்.


எம்பிஏ, எம்எஸ்சி:


கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்துடன்), இயற்பியல், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், மரைன் பயலாஜி அண்ட் ஓசனோகிராபி, கோஸ்டல் ஆக்வாகல்ச்சர், தாவரவியல், விலங்கியல், அப்ளைடு ஜியாலஜி. பிஎட், எம்.எட்., பிபிஎட், பிபிஇஎஸ், எம்பிஇஎஸ்.


பி.இ.: சிவில், சிவில் அண்ட் ஸ்டரக்ச்சுரல், மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் மேனுபாக்ச்சரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல்.
எம்.இ.: வாட்டர் ரிசோர்ஸ், ஸ்ட்ரக்ச்சுரல், தெர்மல், பவர் சிஸ்டம், புரடக்ஷன், புராசஸ் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல்.


எம்சிஏ, எம்எஸ்சி (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் டெக்னாலஜி), எம்.எஸ் (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்.எஸ். (கம்ப்யூட்டர் டெக்னால ஜி), எம்.எஸ்சி. இன்டஸ்ட்ரியல் மேத்தமேட்டிக்ஸ்.


பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை. டிபார்ம், பிபார்ம், எம்.பார்ம்., எம்.பார்ம் (பார்மஸி பிராக்டிஸ்):


M.sc. Agriculture: Agricultural Economics/Agricultural Entomology, Agricultural Extension/ Agricultural microbiology/ Agronomy/ Agricultural Botony (or) Genetics & Plant Breeding/ Horticulture/ Plant Pathology/ Soil Science & Agricultural Chemistry/ Microbial Bio Technology.

எம்பிபிஎஸ், எம்பிடி, பிபிடி, பிஓடி, பிஎஸ்சி நர்சிங், பிடிஎஸ், எம்டிஎஸ்.:

M.D. (General Medicine, Paediatrics, Anaesthesia, Obstetrics & Gynaecology, General Surgery, Anatomy, Physiology, Biochemistry, Pathology, Microbiology, Pharmacology, Community Medicine, Dermatology, Venereology and Leprosy) (M.S. Opthalmology, Otorhinolaryngology, Orthopaedics)

முதுநிலை டிப்ளமா: 
Child Health, Anaesthesiology, obstertrics and Gynaecology, OrthoPaedics, Opthalmology, Laryingology and Otology, Medical Radio Diagnosis.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்:

எம்.ஏ. ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மெண்ட், ஹீயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஊரக வளர்ச்சி.
எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் சயன்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்,
இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, என்விரான்மெண்டல் சயன்ஸ், ஹெர்பல் சயன்ஸ்.

தொடர்புக்கு:
பதிவாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டம் மாவட்டம் } 630 003.

தொலைபேசி: 
04144 - 238248/263/796
இணையதள முகவரி: http://www.annamalaiuniversity.ac.in


அண்ணா பல்கலைக்கழகம்



சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசி தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள்:


இளநிலைப் பட்டங்கள்:
 பி.இ. சிவில், ஜியோ இன்பர்மேடிக்ஸ், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மேனுஃபேக்சரிங், இண்டஸ்ட்ரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், பிரிண்டிங் டெக்னாலஜி, மைனிங், மெக்காடிரானிக்ஸ், மெரைன், மெட்டலர்ஜிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்.

பி.டெக் கெமிக்கல், லெதர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், புரடக்ஷன், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி, பி.ஆர்க்.


பி.இ., பி.டெக் பகுதி நேரம் (சுய ஆதரவுப் படிப்புகள்): 
பி.இ. சிவில், சிவில் (கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட் பாடத்துடன்), சிவில் (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடத்துடன்), சிவில் (பில்டிங் டெக்னாலஜி பாடத்துடன்), சிவில் (என்விரான்மென்டல் பாடத்துடன்).

மெக்கானிக்கல், மேனுபாக்சரிங், இண்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், புரடக்ஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி.


எலெக்ட்ரானிக் மீடியா: எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா (இரண்டாண்டு- ரெகுலர்), எலெக்ட்ரானிக் மீடியா இன்பர்மேடிக்ஸ் (இரண்டாண்டு- ரெகுலர்), எலெக்ட்ரானிக் மீடியா (மூன்றாண்டுகள்-பகுதிநேரம்), எலெக்ட்ரானிக் மீடியா இன்பர்மேடிக்ஸ் (மூன்றாண்டுகள்-பகுதி நேரம்), எலெக்ட்ரானிக் மீடியா (5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பு).


முதுநிலை படிப்புகள்: 
எம்.இ. என்விரான்மென்டல், ஸ்டக்சுரல், ஹைட்ராலஜி அண்ட் வாட்டர் ரிசோர்சஸ், நீர்ப்பாசன மேலாண்மை, சாயில் மெக்கானிக்ஸ் அண்ட் பவுண்டேஷன், அர்பன், கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் கம்பஷன், ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர்கண்டிஷனிங், எனர்ஜி, என்ஜினியரிங் டிசைன், கம்ப்யூட்டர் இன்டகிரேடட் மேனுபாக்சரிங், இண்டஸ்ட்டிரியல், பவர் சிஸ்டம்ஸ், ஹை வோல்டேஜ், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ், அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், மெக்காடிரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், சாப்ட்வேர், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மேனுபாக்சரிங், ஏவியானிக்ஸ்.


எம்டெக் லேசர் அண்ட் எலெக்ட்ரோ ஆப்டிகல், கெமிக்கல், செராமிக், பெட்ரோலியம் ரிபைனிங் அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ், பயோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி, புட்வேர் சயன்ஸ், பாலிமர் சயன்ஸ், தொலையுணர்வு, எம்.ஆர்க். எம்.பிளான்., எம்பிஏ, எம்சிஏ.
எம்எஸ்சி கணிதம், கம்ப்யூட்டர் சயன்ஸ், மெட்டீரியல் சயன்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, பொருளாதாரம், என்விரான்மெண்டல் சயன்ஸ், எம்இ கம்ப்யூனிகேஷன் என்ஜினியரிங்.


முதுநிலை படிப்புகள் (சுய ஆதரவு):


எம்பிஏ, எம்சிஏ, எம்இ என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட், ஜியோ இன்பர்மேடிக்ஸ், புராடக்ட் டிசைன் அண்ட் டெவலப்மென்ட், இன்டர்னல் கம்பஸ்டன், ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங், எனர்ஜி, கம்ப்யூட்டர் இன்டகிரேடட் மேனுபாக்சரிங், குவாலிட்டி என்ஜினியரிங் மேனேஜ்மென்ட், பவர் சிஸ்டம்ஸ், பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ், விஎல்எஸ்ஐ டிசைன், எம்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.இ. எலெக்ட்ரிகல் டிரைவ்ஸ் அண்ட் எம்பெடட் கண்ட்ரோல், எம்பெடட் சிஸ்டம்ஸ் டெக்னாலஜீஸ், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், சிஸ்டம்ஸ் என்ஜினியரிங் அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச், எம்ஆர்க் லேண்ட்ஸ்கேப், டிஜிட்டல் ஆர்க்கிடெக்சர்,
 




திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்



திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1982 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தற்போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்:


தமிழ்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

ஆங்கிலம்:
 எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

பொருளாதாரம்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

வணிகவியல்: எம்.பில்., பிஎச்.டி.;

சமூகவியல்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

சமூகப் பணி: 
எம்.எஸ்.டபிள்யு., எம்.பில்., பிஎச்.டி.;

வரலாறு: 
எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.

கணிதம்: எம்.எஸ்சி., பிஎச்.டி.;

இயற்பியல்: எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.;

வேதியியல்: எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.;
பிளான்ட் சயன்ஸ்: எம்.எஸ்சி. (லைப் சயன்ஸ்- ஒருங்கிணைந்த 5 ஆண்டுப் படிப்பு), எம்.எஸ்சி. (பிளான்ட் பயோடெக்னாலஜி);


அனிமல் சயன்ஸ்: எம்.எஸ்சி. (அனிமல் பயோடெக்னாலஜி),  பிஎச்.டி.; பயோடெக்னாலஜி: எம்.எஸ்சி. (பயோடெக்னாலஜி), பிஎச்.டி.;


மைக்ரோபயாலஜி: எம்.எஸ்சி. (மைக்ரோபயாலஜி), பிஎச்.டி. வயதுவந்தோர், தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வி மையம்: எம்.ஆர்.டெக். (மாஸ்டர் ஆப் ரூரல் டெக்னாலஜி), எம்.பில். (வயதுவந்தோர்- தொடர்கல்வி), பிஎச்.டி. (வயதுவந்தோர் -விரிவாக்கக் கல்வி).


உடற்கல்வி- யோகா மையம்:
 உடற்கல்வியில் எம்.பில். (பகுதிநேரம், முழுநேரம்), பிஎச்.டி. (பகுதிநேரம், முழுநேரம்), யோகா கல்வியில் டிப்ளமா.
கல்வித் தொழில்நுட்பம்: எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி., விடியோகிராபியில் டிப்ளமா.


ஸ்கூல் ஆப் எனர்ஜி: \
எம்.டெக். (எனர்ஜி கன்சர்வேஷன் அன்ட் மேனேஜ்மென்ட்).

புவியியல்:
 எம்.எஸ்சி. (அப்ளைடு ஜியாக்ரபி), பிஎச்.டி.
ஜியாலஜி: எம்.பில்., பிஎச்.டி., ஜியாக்ரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்-ல் முதுநிலை டிப்ளமா.
தொலையுணர்வு மையம்: எம்.டெக். (ஜியாலஜிகல் ரிமோட் சென்சிங்), ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்-ல் அட்வான்ஸ்ட் முதுநிலை டிப்ளமா.


பொறியியல் தொழில்நுட்பப் பள்ளி: 
பி.டெக். -இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, பெட்ரோகெமிகல் டெக்னாலஜி, பார்மசூட்டிகல் பொறியியல் -தொழில்நுட்பம்.


தொலைநிலைக் கல்வி:

தொலைநிலைக் கல்வியில் சான்றிதழ் படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.


தொடர்புக்கு:

பதிவாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.

தொலைபேசி: 0431}2407071, 2407074.

இணையதள முகவரி: http://www.bdu.ac.in/






மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்



மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் 109 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 9 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகும்.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு வகுப்புகள் விவரம்:


எம்.ஏ.: 
தமிழ், ஆங்கிலம், சைவசித்தாந்தம், பிரெஞ்ச், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், மொழியியல், தத்துவம், மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், இதழியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், குருநானக் கல்வி.


எம்.எஸ்சி.: 
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் அறிவியல், உயிரிதொழில்நுட்பம், சக்தி (எனர்ஜி), கணினி அறிவியல், எதிர்காலவியல், புவியியல்.

எம்.எஸ். (ஐ.டி. அண்ட் எம்.), எம்.எஸ். (என்.ஜி.ஓ. அண்ட் எம்.), எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எட்., எம்.எப்.சி., யு.எஸ்.ஐ.சி., ரிமோட் சென்சிங் அண்ட் கார்ட்டோகிராபி, எம்.காம்., எம்.எல்.ஐ.எஸ்சி., பி.எல்.ஐ.எஸ்சி.,


எம்.பில்.:
 தமிழ், வரலாறு, வணிகவியல், சைவசித்தாந்தம், தத்துவம், புவியியல், கணிதம், இயற்பியல், வேதியல், தெலுங்கு, மொழியியல், திருக்குறள், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய தமிழ்க்கல்வி, சம்ஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், பொருளாதாரம், எனர்ஜி சயன்ஸ், மெட்டீரியல் சயன்ஸ், தொழில்முனைவோர் கல்வி, சமூகவியல், அமைதியாக்கம் மற்றும் காந்திய சிந்தனை, கிறிஸ்தவம், கலைவரலாறு, அழகியல் மற்றும் நுண்கலைகள்.



தொடர்புக்கு:

பதிவாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை

தொலைபேசி:
 0452 - 2459166, 2458471, 2458185

 இணையதள முகவரி: http://www.tnau.ac.in/




பாரதியார் பல்கலைக்கழகம்



பாரதியார் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் கோவை மருதமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவையை சுற்றியுள்ள சுமார் 90 கல்லூரிகள் இந்த பலைகலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்:


எம்.ஏ பிரிவில் தமிழியல், சமூகவியல், மக்கள் தொகைக் கல்வி, கம்ப்யூடேஷனல் லிங்க்விஸ்டிக்ஸ் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.


எம்.எஸ்சி பிரிவில் எலக்ட்ரானிக் மீடியா (கல்வி), செயல்முறை உளவியல், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவர அறிவியல், விலங்கு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன்ஸ், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், அட்வான்ஸ்டு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பைனான்ஸ் அண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ் ஆகிய பாடங்கள் உள்ளன.


 எம்.எஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ், எம்.பி.எட்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ ஆகிய சிறப்புப் பாடங்களும் இங்கு உள்ளன.


தொடர்புக்கு:

பாரதியார் பல்கலைக்கழகம்,
மருதமலை,
கோயம்புத்தூர்  - 641 046.

தொலைபேசி: 0422: 2428100, 2422223, 2422234.

இணையதளம்: 
http://www.b-u.ac.in/


டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்



சென்னை மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் பொறியியல் கல்லூரி, முகப்பேர் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய கல்வி நிலையங்கள் டாக்டர் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிலையத்தின் (டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கீழ் உள்ளன.


பிடிஎஸ். பி.இ. சிவில், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், மெக்கானிகல், புரடக்ஷன், பிடெக் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, கெமிக்கல் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, புட் பிராசசிங் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிஆர்க்.எம்இ அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் இன்டகிரேடட் மேனுபாக்சரிங், இண்டஸ்ட்ரியல்.


எம்டெக் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கேட்,காம், கெமிக்கல், கம்ப்யூட்டர் சிஸ்டம் அண்ட் நெட்வொர்கிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், மெஷின் டிசைன், பெட்ரோலியம் ரிஃபைனிங் அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ், பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ் என்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன் எம்எஸ் பயோ இன்பர்மேடிக்ஸ், எம்பெடட் சிஸ்டம்ஸ், சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் அண்ட் மல்டிமீடியா.


எம்பிஏ, எம்சிஏ. பிஎச்டி கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் சிஸ்டம்ஸ், மெக்கானிகல், வேதியியல், மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், கணிதம், இயற்பியல்.

பிஇஎஸ், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், பி.எட்., பி.டி.எட்., பி.பி.எட்.எஸ்., எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் சயன்ஸ், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ், எம்எஸ்சி இன்ட். மேத்ஸ், எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி.


பிஎஸ்சி டிசைன் ஃபேஷன் அண்ட் அப்பேரல், ஃபேஷன் அண்ட் அக்செசரி, ஃபேஷன் அண்ட் விஷூவல் கம்யூனிகேஷன். பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், முதுநிலை டிப்ளமா - அகாமடேஷன் ஆபரேஷன் அண்ட் மேனேஜ்மென்ட், டயடிக்ஸ் அண்ட் நியூட்ரிஷன், ஹாஸ்பிடல் இன்ஸ்ட்ரூமென்டேஷன்.




வேளாண்மைப் பல்கலைக்கழகம்



தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் கடந்த 1971ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது.


வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:


இங்கு 4 ஆண்டு பி.எஸ்சி படிப்பில் வேளாண்மை, மனையியல், வனவியல், தோட்டக்கலை ஆகிய 4 பாடப்பிரிவுகள் உள்ளன.


கோவை, மதுரை, கிள்ளிகுளம் (தூத்துக்குடி) மற்றும் நாவலூர் குட்டப்பட்டு (திருச்சி) ஆகிய இடங்களில் வேளாண்மைப் படிப்பு உள்ளது.


பெரியகுளத்தில் தோட்டக்கலைப் படிப்பும் , மேட்டுப்பாளையத்தில் வனவியல் படிப்பும் மதுரையில் மனையியல் படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன.


இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் காரைக்கால் (புதுவை) பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆய்வு மையத்தில் பி.எஸ்சி., வேளாண்மைப் பாடம் போதிக்கப்படுகிறது. கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் சுயநிதி அடிப்படையின் கீழ் பி.எஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.


குமுளூரில் (திருச்சி) பி.டெக் வேளாண் பொறியியல் படிப்பு உள்ளது. மாறி வரும் கல்விச் சூழலுக்கேற்ப சுயநிதிப் பிரிவின் கீழ் 3 பி.டெக் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பம், வேளாண்மை உயிர் தொழில்நுட்பம், தோட்டக்கலைத்துறை ஆகிய பிடெக் பாடப்பிரிவுகள் உள்ளன.


ஏப்ரலில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள் மூலம் இங்குள்ள பிஎஸ்சி, பிடெக் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


வேளாண் பொருளாதாரம், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், வேளாண் பூச்சியியல், பயிர் வினையியல், பயிர் பெருக்கம் மற்றும் மரபியல், பயிர் நூற்புழுவியல், பயிர் நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழிநுட்பம், மண் வேதியியல், கரும்பு உற்பத்தி, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, உயிர் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், சத்துணவு, வனவியல் ஆகியவற்றில் எம்.எஸ்சி பாடங்கள் உள்ளன.


எம்.இ பாடத்தில் பண்ணை இயந்திரவியல், உயிர் சக்தியியல், வேளாண் பொருள்களைப் பதனிடுதல், மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகள் உள்ளன. எம்.பி.ஏ பாடமும் உண்டு.


தொடர்புக்கு:

பதிவாளர்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.

தொலைபேசி: 0422-6611210, 6611200

 இணையதள முகவரி: http://www.tnau.ac.in/


வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலைக் கழகம்


வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள படிப்புகள்:


இளநிலைப் பட்டப் படிப்புகள்:
பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேஷன்ஸ், பயோ டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.


முதுநிலைப் பட்டப் படிப்புகள்:
 பயோமெடிக்கல் என்ஜினியரிங், இஅஈ/இஅங, கம்யூனிகேஷன், எனர்ஜி சிஸ்டம், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (நெட்ஒர்க்கிங்), மெடிக்கல் பிசிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், யகநஐ ஈங்ள்ண்ஞ்ய், பயோடெக்னாலஜி, கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், என்விரான்மென் டல் என்ஜினியரிங், மெக்காட்ரானிக்ஸ் பார்மோசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, சென்சார் சிஸ்டம் டெக்னாலஜி.

பிபிஏ, எம்பிஏ, மாஸ்டர் ஆஃப் இன்டர்நேஷனல் பிசினஸ்.

பிசிஏ, எம்சிஏ, பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ், எம்.எஸ் (சாஃப்ட்வேர் என்ஜினியரிங் (ஒருங்கிணைந்த படிப்புகள்).

பி.எஸ்சி பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி மைக்ரோபயாலஜி, பி.இ.எஸ் (எலக்ட்ரானிக் சயன்ஸ்), பி.காம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), எம்எஸ்சி பயோ மெடிக்கல் ஜெனிடிக்ஸ், அப்ளைடு மைக்ரோ பயாலஜி, கெமிஸ்ட்ரி (ஆர்கானிக், இனார்கானிக், ஃபிசிக் கல்), பிசிக்ஸ், எம்.காம் (பிசினஸ் பைனான்ஸ்)


மாலைநேரக் கல்லூரி (பகுதி நேர படிப்புகள்):
 சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங் எம்.டெக் (மேனுபேக்சரிங் இன்ஜி னியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்), எம்.டெக் (ஸ்டரக்சுரல் என்ஜினியரிங்), எம்.டெக் (பவர் சிஸ்டம் என்ஜி னியரிங்), எம்.பி.ஏ. இதுதவிர, எம்பில், பிஎச்டி படிக்கவும் வாய்ப்புகள் உண்டு





சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்



சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது


இங்கு வழங்கப்படும் படிப்புகள்:


இளநிலைப் பட்டங்கள்: 
பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், மெக்கானிகல் அண்ட் புரொடக்ஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன், கெமிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிஆர்க், பிஆர்க் (டவுண் அண்ட் கண்ட்ரி பிளானிங்), பி.இ. பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோமெடிக்கல், சிவில் வித் ஸ்பெஷலைசேஷன் இன் ரோட் அண்ட் டிரான்ஸ்போர்ட்.


முதுநிலைப் பட்டங்கள்: 
எம்பிஏ (முழு நேரம்), எம்பிஏ (பகுதி நேரம்), எம்சிஏ, எம்இ கம்ப்யூட்டர் சயன்ஸ், கேட், பவர் எலெக்ட்ரானிக்ஸ், அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ட்ரோல், எம்டெக் பயோ இன்பர்மேடிக்ஸ், எம்எஸ்சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி (5 ஆண்டு படிப்பு), சாப்ட்வேர் என்ஜினியரிங் (5 ஆண்டு படிப்பு), எலெக்ட்ரானிக் சயன்சஸ் (2 ஆண்டுகள்), என்விரான்மென்டல் என்ஜினியரிங், எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் (2 ஆண்டுகள்), எம்.இ. சிவில் என்ஜினியரிங், எம்ஆர்க்.


சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்



தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அகாதமி (சாஸ்த்ரா) நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.


திருமலைசமுத்திரத்தில் உள்ள பிரதான வளாகத்தில் உள்ள 4 ஆண்டு பி.டெக் பட்டப்படிப்புகள்:


பயோ என்ஜினியரிங், பயோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ டெக்னாலஜி, சிவில் என்ஜினியரிங், கெமிக்கல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட், மெக்கானிக்கல் என்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ்.


இவற்றில் பி.டெக் இன்பர்மேட்டிக்ஸ் தவிர மற்ற பிரிவுகளில் டிப்ளமா முடித்தவர்கள் இரண்டாம் ஆண்டு சேரமுடியும்.


முதுநிலைப் பட்டப்படிப்புகள்: 
அட்வான்ஸ்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங், அட்வான்ஸ்ட் மேனுபாக்சரிங், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையால் உதவி அளிக்கப்படும் பயோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ மெடிக்கல் சிக்னல் பிராசசிங் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் பிராசஸ் டிசைன், கம்ப்யூட்டர் சயன்ஸ், கட்டுமானப் பொறியியல் மற்றும் நிர்வாகம், கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன், டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், எம்பெட்டட் சிஸ்டம்ஸ், சுற்றுச்சூழல் பொறியியல், ஹை வோல்டேஜ் என்ஜினியரிங், ஹைவே அண்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன் என்ஜினியரிங், ஹைட்ராலிக்ஸ் மற்றும் நீராதாரவியல் பொறியியல், இன்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி, லாஜிஸ்டிக்ஸ் மானேஜ்மெண்ட், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ், புராஜக்ட் மேனேஜ்மெண்ட், ஸ்ட்ரக்சுரல் என்ஜினியரிங், தெர்மல் பிளான்ட் என்ஜினியரிங், வி.எஸ்.எஸ்.ஐ. டிசைன்.
எம்எஸ்சி பயோ டெக்னாலஜி, எம்.எஸ். எம்பெட்டட் சிஸ்டம்ஸ், எம்.சி.ஏ, எம்.பி.ஏ.


கும்பகோணம் துணை மையத்தில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள்:


பி.எஸ்சி. பயோ-கெமிஸ்ட்ரி, கம்யூனிகேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சயன்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயன்ஸ், பி.பி.ஏ., பிசிஏ, பி.காம், பி.ஏ (சோதிடம்). எம்.எஸ்சி., கணிதம்; எம்.எஸ்சி., கணிதம் -ப்ளஸ் 2-வுக்குப் பிறகு 5 ஆண்டு படிப்பு.


பி.டெக் படிப்புகள்: கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்




பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன்



நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டுள்ள பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தின் கீழ் பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.


இளநிலைப் பட்டப் படிப்புகள்: 
பி.டெக். சிவில், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல், மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், டெலி கம்யூனிகேஷன், மெரைன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், பி.ஆர்க்.


முதுநிலைப் பட்டப் படிப்புகள்: 
எம்.டெக். கேட் (CAD)பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ், தெர்மல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன், சாப்ட்வேர் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிக்கேஷன், அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ், ஸ்டரக்ச்சுரல் என்ஜினியரிங், மெஷின் டிசைன், எம்.இ. பவர் சிஸ்டம்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (ஐ.டி.). பி.டி.எஸ்., எம்.டி.எஸ்.


முதுநிலைப் படிப்புகள்: 
Orthodontics, Oral & Maxillo facial Surgery; Prosthodontics; Conservative Dentistry & Endodontics; Oral Pathology, எம்எஸ்சி மெடிக்கல் பயோ-கெமிஸ்ட்ரி, மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் பயோ-டெக்னாலஜி.

இதைத் தவிர, இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் பிஎச்டி படிக்கவும் வாய்ப்பு உண்டு







கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்



தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன.


இளநிலைக் கால்நடை அறிவியல் (பிவிஎஸ்சி), முதுநிலைக் கால்நடை அறிவியல் (எம்விஎஸ்சி), இளிநிலை மீன்வள அறிவியல் (பிஎஃப்எஸ்சி), முதுநிலை மீனவள அறிவியல் (எம்எஃப்எஸ்சி) ஆகிய படிப்புகள் உள்ளன.


பிவிஎஸ்சி படிப்பில் மொத்தம் 228 இடங்கள் உள்ளன. பிஎஃப்எஸ்சிக்கு 25 இடங்கள் உள்ளன. இதில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.


முதுநிலைக் கால்நடை அறிவியல் படிப்பில் அனாடமி, அனிமல் பயோ டெக்னாலஜி, அனிமல் நியுட்ரிஷன், டெய்ரி கெமிஸ்ட்ரி உள்பட 23 பிரிவுகள் உள்ளன.


பிஎச்டியில் டெய்ரி சயன்ஸ், சர்ஜரி, வெட்னரி பேத்தாலஜி உள்பட 19 பிரிவுகள் உள்ளன.

முதுநிலை மீன்வள அறிவியல் படிப்பில் அக்குவா கல்ச்சர், பிஷரீஸ் பயாலஜி, பயோ டெக்னாலஜி, என்விரான்மெண்ட் உள்பட 7 பிரிவுகள் உள்ளன.


பிஎச்டி-யில் அக்குவாகல்ச்சர், பிஷரீஸ் பயாலஜி, பிஷரீஸ் எகனாமிக்ஸ் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.


தொடர்புக்கு...

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்,
வேப்பேரி,
சென்னை - 600007.

இணையதளம்: http://www.tanuvas.tn.nic.in/










அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்



சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள ஐந்து அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சேலத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரி ஆகியவை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன.


அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏபிஎல் ஆனர்ஸ் ஐந்து ஆண்டு சிறப்புச் சட்டப் படிப்பு உள்ளது. அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்கமைவு, பிசினஸ் லா ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு எம்.எல். பட்டப்படிப்பும் உள்ளது.


செங்கல்பட்டில் புதிதாகச் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.